ஐரோப்பா

கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி ;அதிரவைக்கும் பின்னணி

பிரித்தானியாவில், கருக்கலைப்பு செய்த பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்துவருகிறார்கள்.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், பிரித்தானியாவில் கொரோனா காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தபால் மூலம் கருக்கலைப்பு மாத்திரை பெற்று கருக்கலைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கருக்கலைப்பு செய்தார்.

ஆனால், அந்த கருவை, அல்லது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய விடயம், அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தந்துள்ளது.அதாவது, இந்த தபால் மூலம் கருக்கலைப்பு மாத்திரை பெற்று கருக்கலைப்பு செய்யும் திட்டத்தின் கீழ், 10 வாரத்துக்கு குறைவான கருவைக் கலைக்கவே அனுமதி உள்ளது.

ஆனால், அந்தக் கருவை சோதித்த மருத்துவர்கள், அது ஒரு ஏழு முதல் எட்டு மாதங்கள் வளர்ந்த குழந்தை என்று கூறியுள்ளார்கள். அந்தப் பெண் தனது வயிற்றிலிருக்கும் கரு 10 வாரத்துக்கும் குறைவான கரு என்று சொல்லித்தான் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார்.

அத்துடன், தான் குற்றம் செய்ததாக அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை.ஆகவே, அவர் தன் குழந்தையை இழந்ததால் பெரும் துயரடைந்திருந்தாலும், குழந்தையைக் குறித்த நினைவுகளால் வாடினாலும், அவர் மட்டும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தால் சிறைத்தண்டனை தள்ளிவைக்கப்பட்டிருக்கும், அதாவது சிறை செல்லவேண்டி வந்திராது என்று கூறியுள்ளார் நீதிபதி.

அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆண்டு அவர் சிறையில்தான் செலவிடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!