வீட்டுப் பாடங்களை மாற்றியமைக்கும் செயற்கை நுண்ணறிவுகள் – ChatGPT நிறுவனர் தகவல்
கல்வியை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடியதாக செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் காணப்படும் என ChatGPTயின் நிறுவனர் Sam Altman தெரிவித்துள்ளார்.
கால்குலேட்டர்கள் போன்று செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது கற்றலுக்கு மாற்றாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் வீட்டுக்கு எடுத்துச்சென்று எழுதும் கட்டுரைகள் பாதிக்கப்படலாம் என்று ஜப்பானின் கியோ (Keio) பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் பேசியபோது அவர் கூறினார்.
நாம் கற்றுக்கொடுக்கும் விதமும் மாணவர்களை மதிப்பிடும் விதமும் மாறவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு அம்சங்களும் கொண்டுவர வேண்டும் என்று Altman வலியுறுத்தினார்.
ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வேலைச் சந்தைப் பாதிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். சில வேலைகள் போகலாம். ஆனால் புது ரக வேலைகளும் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.