சிங்கப்பூரில் தங்க சங்கிலி வாங்க வந்தவர் செய்த அதிர்ச்சி செயல் – சுற்றிவளைத்த அதிகாரிகள்
சிங்கப்பூரில் அடகு கடையில் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடகுக் கடைக்குச் சென்ற அந்த நபர் தங்க நகைகளை வாங்குவது போல பார்த்துக்கொண்டு இருந்தார் என சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் தங்க கைச்செயினை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளியன்று மதியம் 2.18 மணியளவில் ரிவர் வேலியில் உள்ள Indus சாலையில் நடந்தது. இது குறித்து பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், 31 வயதான நபரின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிந்து, ஆர்ச்சர்ட் வீதிக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு வந்த எட்டு மணி நேரத்திற்குள் அவரை கைது செய்து பொலிஸார் அதிரடி காட்டினர்.
அதன் பின்னர், அவரிடம் இருந்து சுமார் 8,655 டொலர் பெறுமதியான ரொக்கம் மற்றும் தங்க சங்கிலி மீட்கப்பட்டது.
இதுபோன்ற குற்றத்திற்கு, இது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.