நடுவானில் சுயநினைவை இழந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி !
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நியூயார்க்கிற்கு விமானம் மூலமாக பயணப்பட்ட சிறுவன் திடீரென்று சுயநினைவை இழந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் ஹங்கேரியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்களின் உதவியை நாடியிருந்த விமான ஊழியர்கள், 11 வயதேயான அந்த சிறுவனுக்கு முதலுதவியும் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் விமானம் ஹங்கேரியில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவர்கள் குழு ஒன்று விமானத்தினுள் சென்று சிறுவனை பரிசோதித்துள்ளனர். ஆனால் பரிதாபமாக சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருந்த சிறுவன் அமெரிக்க குடிமகன் எனவும், குடும்பத்துடன் பயணப்பட்டுள்ளதும் உள்ளூர் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில்,விமானியின் அவசர தகவலை அடுத்து, மருத்துவர்கள் குழு ஒன்று தயார் நிலையில் இருந்தது. விமானம் தரையிறங்கியதும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மணி நேர தாமதத்திற்கு பின்னர் விமானம் புறப்பட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சிறுவன் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தரப்பு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.