இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் மொத்தக் கட்டணங்கள் 3% குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான கட்டண திருத்தங்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் 30 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் வசூலிக்கப்படும் கட்டணம் 26.9% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 31-60க்கு இடைப்பட்ட யூனிட்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் 10.8% ஆகவும், 31-60 யூனிட்டுகளுக்கு கட்டணம் 7.2% ஆகவும், 91-180க்கான கட்டணம் 3.4% ஆகவும் குறைக்கப்படும்.
மேலும், 180 யூனிட்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு யூனிட் மின்சார கட்டணம் 1.3% குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணங்கள் 3.2% குறைக்கப்பட உள்ளதாகவும், தொழிற்சாலைகள், பொதுப் பிரிவுகள், தெருவிளக்குகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.