அதிகம் சீரகம் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது
நாம் சாப்பிடும் உணவில் சுவையை அதிகரிக்க அதிகப்படியான சீரகத்தை சிலர் உணவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையை குறைக்க பயன்படுத்துவதால் இதை அதிக அளவில் பலரும் எடுத்துக் கொள்வது வழக்கம்.
இந்த சீரகத்தில் இரும்பு சத்து, தாமிரம், விட்டமின் ஏ மற்றும் இ உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது தான் என்றாலும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரும்.
சீரகத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். உடலில் இருக்கும் வாய்வை போக்க சீரகம் உதவுகிறது. இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் இறப்பை குடலில் இருந்து பித்தப்பை பிரச்சனையை வேகமாக நீக்குகின்றது. இதனால் நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும்.
சீரகத்தை பெண்கள் அதிக அளவில் மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். எனவே மாதவிடாய் காலத்தில், இதை தவிர்ப்பது நல்லது.
சீரகத் தண்ணீர் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் இதனால் நமக்கு வாந்தி உள்ளிட்ட ஒவ்வாமை ஏற்படக்கூடும்.
சீரகத்தில் இருக்கும் எண்ணெய் கல்லீரலை பாதிப்படைய வைக்கலாம். கல்லீரல் பாதிப்பு அல்லது சிறுநீரக பாதிப்பு கொண்டிருப்பவர்கள் சீரகத்தை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.