இலங்கை

ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த இலங்கை வீரர்கள் – கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளக்கம்

உலக கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகளிற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணியினர் அந்த நாட்டில் ஹோட்டலில் அறைகளிற்கு வெளியே சோர்வடைந்த நிலையில் பல மணிநேரம் காத்திருந்தனர்.

அதனை வெளிப்படுத்தும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து விளக்கமளித்துள்ளது.

சிம்பாப்வேயில் ஹோட்டலிற்கு வெளியே காத்திருக்கும் படங்களை இலங்கை அணியின் பல வீரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

சதீரசமரவிக்கிரமவும மகேஸ்தீக்சனவும் பகிர்ந்துகொண்டுள்ள பல படங்கள் வீரர்கள் பலர் பல மணிநேரம் காத்திருப்பதை காண்பித்துள்ளன.

இன்ஸ்டகிராமில் பதியப்பட்ட படங்கள் பின்னர் அழிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் இலங்கை அணியினர் ஹோட்டலிற்கு மதியம் வந்து சேர்ந்தனர் அவர்கள் வந்தவேளை மற்றுமொரு அணியும் வந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களிற்கு உரிய அறைகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது என இலங்கை கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த விடயத்தை ஹோட்டல் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!