இந்தியா

கோவை விமான நிலையத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை எவ்வளவு தெரியுமா?

கோவை விமான நிலையத்தில் இரண்டு இட்லி மற்றும் ஒரு வடை ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் இட்லி ஒன்று ரூ.90, ஒரு செட் இட்லி மட்டும் ரூ.120, பரோட்டா குருமா ரூ.200, சப்பாத்தி ஒரு செட் ரூ.200, ஆனியன் ரோஸ்ட் ரூ.220 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கோவை பீளமேட்டில் அமைந்துள்ள விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த விலை கேட்போரை நிச்சயம் தலை சுற்ற வைக்கும். விமான நிலையத்திற்கு மட்டுமில்லை. விமான நிலையத்திற்கு வெளிப்புறத்தில் உள்ள கடையிலும் இதேபோலவே விலை அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது என்று பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள், தப்பித்தவறி கூட ஏர்போர்ட்டில் சாப்பிட ஆசைப்படக்கூடாது என்பது போல் உணவு பொருட்களின் விலை இருப்பதாக, மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!