ஐரோப்பா

ஜெர்மனியில் பரீட்சை பெறுபேறு வெளியீட்டை கொண்டாட தயாரானவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தற்பொழுது வெளிவருகின்றன.

ஜெர்மனியில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையானது நடைபெற்றுள்ளது. தற்பொழுது பரீட்சையினுடைய பெறுபேறுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள லெம்டோ பிரதேசத்தில் உள்ள மரியானா பேர்பர் ஜிம்நாசியம் என்று சொல்லப்படுகின்ற உயர்தர பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் தாம் தங்களது பரீட்சையில் தேற்றிய பிறகு அபி பார்டி என்று சொல்லப்படுகின்ற பரீட்சையில் தேற்றிய பின் கொண்டாடப்படும் பார்டியை சமர்ப்பிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த பார்டிக்காக சேகரிக்கப்பட்ட 27 ஆயிரம் யுரோக்களை ஒரு மாணவன் தன்னுடன் எடுத்து செற்று விட்டதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த மாணவனானவன் 10 நாட்களுக்கு முன்னதாகவே பாடசாலையை விட்டு வெளியேறியதாகவும் இதன் தொடர்பில் குறித்த பணத்தை எடுத்து சென்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.

தற்பொழுது இது சம்பந்தமான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் இந்த பாடசாலையில் கல்வி கற்கின்றவர்கள் இந்த விழாவிற்கு பிரதியீடாக மீண்டும் அவர்கள் ஸ்பெண்ட என்று சொல்லப்படுகின்ற பண பங்களிப்பை பெற்று வருகின்றார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்