உலகம் செய்தி

போர் உக்கிரம்: ஈரானும் பதிலடி! ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்!

ஈரானின் Iran பதிலடி தாக்குதல்கள் தொடர்வதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், பாதுகாப்பற்றச் சூழலும் உருவாகியுள்ளது.

ஈராக் Iraq, பஹ்ரைன் Bahrain மற்றும் ஓமான் Oman ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் சேமிப்பு முனையங்கள் மற்றும் கப்பல்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

ஈரானில் இஸ்ரேல் Israel மற்றும் அமெரிக்கா US ஆகிய நாடுகள் 13 ஆவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது.

வங்கிகள் குறிவைப்பு

ஈரான் பொருளாதாரத்தை முடக்க தெஹ்ரானின் உள்ள வங்கி ஒன்றின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் என்பன வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் வங்கி ஊழியர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,

”எங்கள் வங்கி மீது தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக, மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய வங்கிகள், பொருளாதார மையங்கள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தும்” எனக் குறிப்பிட்டார்.

இதனால் சவுதி அரேபியா, துபாய், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலானது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை அதிகரிப்பே பிரதான தாக்கமாக உள்ளது. இலங்கையிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!