இந்தியாவிடமிருந்து 10 பெய்லி பாலங்கள் இன்று இலங்கைக்கு
“டிட்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த பாலங்கள் இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பொருளாதாரப் பொதியின் ஒரு அங்கமாகும் என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாலங்கள் இலங்கைக்கு வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை உடனடியாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





