கர்நாடகாவில் நடந்த வெடிவிபத்தில் பாடசாலை குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
கர்நாடகாவின்(Karnataka) மோல்கேரா(Molkera) கிராமத்தில் உள்ள மோல்கி மாரய்யா(Molki Marayya) கோயில் அருகே சாலையோரப் பகுதியில் சதேகத்திற்கிடமான பொருள் ஒன்று வெடித்ததில் பாடசாலை குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரின் காயங்கள் கடுமையானவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமத்திலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெடித்த பொருளின் தன்மை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மாதிரிகளை சேகரித்து வெடிப்புக்கான காரணத்தை மதிப்பிடுவதற்காக தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை சோதனை செய்து வருவதாகவும் அமைச்சர் ஈஸ்வர் பி காண்ட்ரே குறிப்பிட்டுள்ளார்.





