இந்தியாவிலும் அமுலுக்கு வரும் சமூக ஊடகத் தடை?
இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடக தளங்களால் சுமார் 12 மில்லியன் சிறார்கள் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பொன்றில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மூன்று இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் பாஜகவின் முக்கிய கூட்டாளியான ஒருவர், 16 வயதுக்குட்பட்ட எவரும் சமூக ஊடகக் கணக்கை உருவாக்குவதையோ அல்லது பராமரிப்பதையோ தடைசெய்யும் நாடு தழுவிய சட்டமூலம் ஒன்றை முன்மொழிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வயது அடிப்படையிலான அணுகல் வரம்புகள் மற்றும் நாட்டின் பெரிய இணைய பயனர் தளத்தைக் கருத்தில் கொண்டு, வயது சரிபார்ப்பை அமல்படுத்துவதற்கு தளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.





