அரசியல் இலங்கை செய்தி

“மோசடிகளை திசை திருப்பவே ராஜபக்ச குடும்பம் இலக்கு வைப்பு”

“ எனது குடும்பத்தை இலக்கு வைத்து தனது ஆட்சியில் அரங்கேறும் மோசடிகளை திசை திருப்பலாம் என NPP அரசாங்கம் கருதுமானால் அது ஒருபோதும் நடக்காது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (31) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எழுச்சி பெற்றது. அடுத்த தேர்தல்களிலும் நிச்சயம் வெற்றிநடை போடும்.

ஏனெனில் பொய்களை மட்டும்கூறி தொடர்ந்து நாட்டை ஆள முடியாது. யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். எனவே, தேர்தலொன்று நடைபெற்றால் உண்மை தெரியவரும்.

என்னையும், எனது தாயையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
எம்மை விசாரணைக்கு அழைத்து தமது மோசடிகளை திசைதிருப்பலாம் என அரசாங்கம் கருதுகின்றது போலும்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி, கொள்கலன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இடம்பெற்றுள்ள தவறுகளை திசை திருப்ப முடியாது. அரசாங்கம் பொறுப்புகூறியே ஆகவேண்டும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!