கட்சி தாவல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சசி தரூர் எம்.பி.!
காங்கிரஸிலிருந்து Congress வெளியேறி பா.ஜ.கவுடன் BJP சங்கமிக்கவுள்ளார் என வெளியாகும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் Shashi Tharoor.
“ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்.” என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் திருவனந்தபுரம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பங்கேற்றிருந்தார்.
இதன்போது பா.ஜ.கவில் இணைவது பற்றி ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
“ நான் தொடர்ந்து காங்கிரஸில் இருக்கிறேன். வேறு எங்கும் செல்ல மாட்டேன். காங்கிரஸில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன்.
எனது முந்தைய கருத்துகள் பாஜகவுக்கு ஆதரவான கருத்துகள் கிடையாது. நமது தேசத்துக்கு ஆதரவான கருத்துகள். சில விவகாரங்களில் எனது கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டன.” என சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.





