உலகம் செய்தி

ஐவரி கோஸ்ட் ஜனாதிபதியை அவமதித்த மாலி பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை

சமீபத்தில் நான்காவது முறையாகப் பதவியேற்ற 84 வயதான ஐவோரியன் ஜனாதிபதியை அவமதித்ததற்காக மாலி(Mali) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஐவரி கோஸ்ட்(Ivory Coast) நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மாலியின் இராணுவ ஆட்சிக் குழுவால் அமைக்கப்பட்ட இடைக்கால பாராளுமன்றத்தில் பணியாற்றும் மமடூ ஹவா கஸ்ஸாமா(Mamadou Hawa Gassama), கடந்த ஜூலை மாதம் ஐவரி கோஸ்டுக்கு பயணம் செய்த போது கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதி அலசேன் ஔட்டாராவை(Alassane Ouattara) கொடுங்கோலர், மாலியின் எதிரி என்று வர்ணித்ததாகவும் நேர்காணல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவரது தலைமையை கடுமையாக விமர்சித்ததாகவும் வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, கஸ்ஸாமாவுக்கு அபராதம் மற்றும் அவர் விடுதலையான பிறகு சமமான காலத்திற்கு ஐவரி கோஸ்டில் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களில் தனது வெளிப்படையான கருத்துக்களுக்காக அறியப்பட்ட கஸ்ஸாமா, மாலியின் 2020 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்ராஹிம் பௌபக்கர் கெய்டாவின்(Ibrahim Boubacar Keita) ஜனாதிபதி காலத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!