டி20 தொடர் – இங்கிலாந்து அணிக்கு 134 ஓட்டங்கள் இலக்கு
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், பல்லேகல(Pallekele) மைதானத்தில் முதலாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டு நடுவார்களால் 17 ஓவர்களுக்கு போட்டி நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 37 ஓட்டங்களும் பதும் நிசங்க(Pathum Nissanka) 23 ஓட்டங்களும் குவித்தனர்.





