நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் பின்னடைவு!
50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் செயற்திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. உறைபனி வெப்பநிலை காரணமாக மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்ட்டெமிஸ் மூன்ஷாட் (Artemis moonshot) என்ற திட்டம் பிப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னதாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது 02 நாள் தாமதமாகியுள்ளது.
ரொக்கெட்டிற்கு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையை சனிக்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சீரற்ற வானிலை காரணமாக அந்த திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாதகமான வானிலை ஏற்பட்டால் ஆடை ஒத்திகைகளை வரும் திங்கட்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே விண்வெளிக்கு செல்லவுள்ள கமாண்டர் ரீட் வைஸ்மேன் (Commander Reid Wiseman) மற்றும் அவரது குழுவினர் தற்போது ஹூஸ்டனில் (Houston) தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





