இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது!

அரசியலமைப்பு பேரவை Constitutional Council நாளை (31) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் Auditor general தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறுகின்றது.

கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த WPC விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார்.

அன்று முதல் இன்றுவரை புதிய கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவரின் பதவிகாலமும் முடிவடைந்தது.

இந்நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால்
முன்மொழியப்பட்டிருந்த பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி புதிய பெயரை
முன்மொழிந்துள்ளார்.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று சிவில் பிரதிநிதிகள் உட்பட அரசமைப்பு பேரவையில் 10 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!