வவுனியாவிலிருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பேருந்து சேவை ஆரம்பம்
வவுனியாவில் இருந்து கொழும்பிற்கான புதிய சொகுசு பேருந்து சேவை இலங்கை போக்குவரத்துச்சபையால் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துச்சேவை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 09.05 க்கு புறப்பட்டு புத்தளம் வழியாக கொழும்பை சென்றடையும்.
வவுனியா வீதிக்கு சொந்தமாக சொகுசு பேருந்துகள் இல்லாத நிலையில் அனுராதபுரம் வீதிக்கு சொந்தமான பேருந்தின் மூலம் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சேவையானது முதற்கட்டமாக ஒருவழிப்பாதை கொண்டதாக அமைந்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் அது விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனியாவில் இருந்து கொழும்பிற்கு ஒரு பயணிக்கு 1460 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வவுனியா வீதியின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.





