டித்வா புயல்: சர்வதேச கொடையாளர் மாநாடு இழுபறியில்!
இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
2026 ஜனவரி மாதம் குறித்த மாநாடு நடத்தப்படும் என 2025 இறுதியில் அரச தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்னும் அது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.
இது விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதமானது மீள் கட்டமைப்பு நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புக்கு மேலதிகமாக 500 பில்லியன் ரூபாவை செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உள்கட்டமைப்பு, வீடுகளை மீளமைத்தல், விவசாயம் மற்றும் பிற தொழில்களின் வணிக மீட்பு என்பவற்றுக்கே மேற்படி செலவு மதிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துமாறு எதிரணிகளும் தொடர்;ச்சியாக வலியுறுத்தி வந்தன.
எனினும், அதனை நடத்துவதற்குரிய திகதி இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.





