இங்கிலாந்திற்கு ஆபத்து : ஸ்டாமரின் சீன விஜயத்தை தொடர்ந்து ட்ரம்ப் எச்சரிக்கை!
பிரித்தானியா மற்றும் சீனாவிற்கு இடையில் இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான சந்திப்பை தொடர்ந்து, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவை எச்சரித்துள்ளார்.
போட்டி வல்லரசுடன் இங்கிலாந்து நெருக்கமான உறவுகளைத் தொடர்வது “மிகவும் ஆபத்தானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு ஆண்டுகளில் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்த முதல் பிரித்தானிய பிரதமரான ஸ்டாமர் விசா முதல் மேம்பட்ட சந்தை அணுகல் வரை ஏறக்குறைய 13 பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளார்.
இருப்பினும் வொஷிங்டனுடன் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஸ்டார்மரின் முயற்சிகள் பின்னடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் கணிக்க முடியாத தன்மை மற்றும் சீனா மீதான நீண்டகால விரோதப் போக்கானது பிரித்தானியாவிற்கு பாரிய சவால்களை கொண்டுவரும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தப் பயணம் மற்றும் இங்கிலாந்தின் நோக்கங்கள் குறித்து அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





