ஹாரி சூறாவளி எதிரொலி – மத்தியத் தரைக்கடலில் 380 பேர் மாயமாகியிருக்கலாம்!
கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளை தாக்கிய ஹாரி சூறாவளி காரணமாக மத்தியத் தரைக்கடலில் பயணித்த சுமார் 380 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் என இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
துனிசியாவில் இருந்து புறப்பட்ட 380 பேர் நீரில் மூழ்கியிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
துனிசிய துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் (Sfax) இருந்து ஆட்கடத்தல்காரர்களால் இயக்கப்பட்ட சுமார் 08 படகுகளை அதிகாரிகள் தேடி வருவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேவேளை மால்டாவில் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ் விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி ஆப்பிரிக்காவில் இருந்து பெரும்பாலானவர்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பயணங்களால் 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 25,600 இறப்புகள் மற்றும் காணாமல் போனவர்களை ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு பதிவு செய்துள்ளது.





