எம்மி விருது வென்ற பாலஸ்தீன பத்திரிகையாளரின் டிக்டாக் கணக்கு முடக்கம்
அமெரிக்காவில்(America) புதிய முதலீட்டாளர்கள் சமூக ஊடக தளத்தை கையகப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பாலஸ்தீன(Palestinian) பத்திரிகையாளர் பிசான் ஓவ்டாவின்(Bisan Owda) டிக்டோக்(Tiktok) கணக்கு நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது.
எம்மி விருது(Emmy Awards) பெற்ற பத்திரிகையாளரும், காசாவை(Gaza) சேர்ந்த அல் ஜசீரா AJ+(Al Jazeera AJ+) பத்திரிகையாளருமான பிசான் ஓவ்டா, தனது இன்ஸ்டாகிராம்(Instagram) மற்றும் எக்ஸ்(X) கணக்குகளில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து தனது டிக்டோக் கணக்கு தடைசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“டிக்டோக் எனது கணக்கை நீக்கியது. எனக்கு அங்கு 1.4 மில்லியன் பின்தொடர்பவர்கள் இருந்தனர், நான் நான்கு ஆண்டுகளாக அந்த தளத்தை உருவாக்கி வருகிறேன்” என்று அவர் காசாவில் இருந்து படமாக்கப்பட்ட காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், “எப்போதும் போலவே இது தடைசெய்யப்படும் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று நினைக்கவில்லை தடைசெய்யப்படாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் டிக்டோக் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் பிரஸ்ஸர்(Adam Presser) ஆகியோரின் கருத்துக்களை ஓவ்டா சமீபத்தில் பகிர்ந்து கொண்ட பிறகே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.




