ஈரானின் புரட்சிகர காவல்படையை பயங்கரவாத குழுவாக பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
போராட்டக்காரர்கள் மீதான கொடூரமான அடக்குமுறையின் போது 6,373 பேரைக் கொன்ற பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின்(Iran) இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை(IRGC) ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட உள்ளது என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ்(Kaja Kallas) குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஆதரவை வழங்கினால், ஈரானின் புரட்சிகர காவல்படையை அல்-கொய்தா(al-Qaeda), இஸ்லாமிய அரசு(IS), டேஷ்(Daesh) மற்றும் ஹமாஸ்(Hamas) போன்ற பயங்கரவாத குழுக்களுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “நீங்கள் மக்களை அடக்கினால், அதற்கு ஒரு விலை உண்டு, இதற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்” என்று பிரஸ்ஸல்ஸில்(Brussels) நடந்த அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானிய புரட்சிகர காவல்படை ஏற்கனவே அமெரிக்கா(America), ஆஸ்திரேலியா(Australia) மற்றும் கனடாவால்(Canada) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





