UKவில் மருத்துவர் ஒருவரின் மோசமான செயல் – 100 குழந்தைகள் பாதிப்பு!
பிரித்தானியாவில் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் (Great Ormond Street) மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் ஒருவரால் ஏறக்குறைய 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
யாசர் ஜப்பார் (Yaser Jabbar) என்ற மருத்துவர் மீதே மேற்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற லண்டன் மருத்துவமனையால் வெளியிடப்பட்ட விசாரணையில், அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளில் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பல சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்கு பரவலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஜப்பார் 2017 மற்றும் 2022 க்கு இடையில் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளதாகவும், 789 குழந்தைகளுக்கு சிகிச்சையளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் 94 பேர் மேற்படி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகத் தகடுகள், எலும்பு ஒட்டுக்கள் மற்றும் உள்வைப்புகள் செருகுவது உள்ளிட்ட அவர் வழங்கிய சிகிச்சைகள் அதிக ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன.
அனைத்து தீங்குகளும் தவிர்க்கக்கூடியவையா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை என்றும் ஜப்பாரின் நடைமுறை பல பகுதிகளில் தரமற்றதாக இருந்தது என்றும் GOSH குறிப்பிடப்பட்டுள்ளது.





