ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி – மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்த ட்ரம்ப்’!
ஈரானில் அதிகரித்து வரும் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேலிய மற்றும் சவுதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
தெஹ்ரானுடனான பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில் சவுதி அரேபியாவின் தூதுக்குழுவொன்று அமெரிக்காவிற்கு தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ட்ரம்ப் மேற்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே ஈரானுக்குள் இருக்கும் சாத்தியமான இலக்குகள் குறித்த உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் வொஷிங்டன் டிசியில் உள்ளனர்.
அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முழு அளவிலான போராக கருதப்படும் என தெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





