பிரித்தானியாவில் தங்கம் வெல்ல அரிய வாய்ப்பு – நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் போட்டி!
ராயல் மின்ட், “தி கிரேட் பிரிட்டிஷ் ட்ரெஷர் ஹன்ட்” (The Great British Treasure Hunt) என்ற போட்டியை நாடு தழுவிய ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டி பங்கேற்பாளர்களுக்கு 250 கிராம் திட தங்கப் பட்டையை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது, தற்போது இதன் மதிப்பு £28,000 முதல் £29,000 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எண்கள், எழுத்துக்கள் மற்றும் சின்னங்கள் இடம்பெறும் ஒரு சிறப்பு £5 “பென்னி டிராப்ஸ்” (“penny drops) நாணயமும் அடங்கும்.
இந்த போட்டியில் 05 நிலை புதிர்கள் இருக்கும். முதல் நிலை ஆன்லைனில் முயற்சி செய்வது இலவசம் என்றாலும், இரண்டு முதல் ஐந்து நிலைகளில் பங்கேற்க சிறப்பு நாணயம் அல்லது அதன் பேக்கேஜிங்கை கொள்வனவு செய்ய வேண்டும்.
இப்போட்டியானது பிப்ரவரி 3 ஆம் திகதி தொடங்கி மார்ச் 30 ஆம் திகதி முடிவடைகிறது.
பங்கேற்பாளர்கள் பிரித்தானியாவை தளமாகக் கொண்டவர்களாகவும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.





