அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு சுரேஷ் அணியும் ஆதரவு!

கிவுல் ஓயா Kivul Oya project திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முழு ஆதரவு வழங்குவதற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் Suresh Premachandran வெளியிட்டுள்ளார்.

“கிவுல் ஓயா என்ற புதிய நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை உருவாக்கி சிங்களக் குடியேற்றங்களை விஸ்தரிக்கும் நோக்கில் அமுல்படுத்த எத்தனிக்கும் இத்திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நிராகரிக்க வேண்டும்.

இதற்கு அரசு செலவு செய்ய உத்தேசித்துள்ள 23 ஆயிரத்து 500 கோடி ரூபாவை எப்படிப் புரட்டப் போகின்றார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளும்.” – எனவும் சுரேஷ் பிரமேசந்திரன் தெரிவித்தார்.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!