Ukவில் வேலைகளை பெற போலியான ஆவணங்களை தயாரிக்கும் மோசடியாளர்கள் – ஏமாறும் மக்கள்!
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு வேலைகளை பெற்றுத்தருவதாக கூறி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் உள்துறை அலுவலகம் விசாரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தி டைம்ஸ் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்ததை அடுத்து உள்துறை அலுவலகம் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளில் தவறான வேலைப் பதிவுகளை வழங்கும் ‘விசா முகவர்கள்’ இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இல்லாத வேலைவாய்ப்புக்கான ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்களைப் பெறுவதற்காக, CVகள் மற்றும் வங்கி பதிவுகள் உட்பட போலியான ஆவணங்களுக்கு புலம்பெயர்ந்தோர் £13,000 வரை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
2020 இல் நிறுவப்பட்ட திறமையான தொழிலாளர் விசா ஸ்பான்சர்ஷிப் திட்டம், பற்றாக்குறை உள்ள தொழில்களில் காலியிடங்களை நிரப்புவதற்காக அங்கீகரிக்கப்பட்ட முதலாளியிடமிருந்து சான்றிதழுடன் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் வாழ அனுமதிக்கிறது.
இந்த திட்டத்தை சில போலி முகவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.





