டி20 தொடர் – இந்திய அணிக்கு 216 ஓட்டங்கள் இலக்கு
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இன்று நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில், டெவோன் கோன்வே(Glenn Phillips) 44 ஓட்டங்களும் டிம் செய்பிரட்(Tim Seifert) 62 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில், அர்ஷிதீப் சிங்(Arshdeep Singh) மற்றும் குல்தீப் யாதவ்(Kuldeep Yadav) தலா இரண்டு விக்கெட்கள் கைப்பற்றியுள்ளனர்.





