உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – 05 பேர் உயிரிழப்பு!
உக்ரேனிய பயணிகள் ரயில் மீது ரஷ்யா நேற்று ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில் 200இற்கும் அதிகமானோர் பயணித்த நிலையில், 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை பயங்கரவாத செயல் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) குற்றம் சாட்டியுள்ளார்.
போரை நிறுத்துவதற்காக அபுதாபியில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை குறைமதிப்பிற்கு உட்டுபடுத்தும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





