செய்தி

உரிய திசையில் பயணிக்கும் இலங்கைப் பொருளாதாரம்: IMF பாராட்டு!

டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் IMF குழு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் Anura Kumara Dissanayake பேச்சு நடத்தியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று 28) முற்பகல் மேற்படி சந்திப்பு நடைபெற்றது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த IMF பிரதிநிதிகள் குழு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டனர்.

அனத்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கைப் பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் ஏற்பட்ட பேரிடர் குறித்து தமது கவலையை IMF பிரதிநிதிகள் குழு வெளியிட்டனர்.

சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் அரசாங்கம் எடுத்த விரைவான நடவடிக்கைகளைப் பாராட்டினர்.

அத்துடன், கடந்த ஆண்டில் அரசாங்கம் பேணிய உயர் நிதி ஒழுக்கம் இந்த சவாலை எதிர்கொள்வதில் பிரதான காரணி என்றும் IMF பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

திறைசேரியில் மேலதிக நிதியை பேணியதாலே அரசாங்கத்தினால் 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டை சமர்ப்பிக்க முடிந்துள்ளது எனவும் இது மிகவும் பாராட்டுக்குரிய விடயம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

“கடுமையான பேரிடர் நிலைமையிலும் கூட தற்பொழுது உரிய பொருளாதார திசையில் இலங்கை பயணிக்கின்றது.

இலங்கையுடன் முன்னெடுக்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல், அதன் 6 வது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சு எதிர்வரும் மார்ச் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.” – எனவும் IMF பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல், அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!