நீதிமன்றில் முன்னிலையானார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe இன்று (28) மதியம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் Magistrate’s Court முன்னிலையானார்.
ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் வரும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் கூடி இருந்தனர்.
அவர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்துவிட்டு தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றம் நோக்கி ரணில் சென்றார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், தனது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கு அரச நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
லண்டனுக்குரிய தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க, சிஐடியினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
பிணை வழங்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் குறித்த வழக்கு இன்று புதன்கிழமை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.





