இலங்கை செய்தி

பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு பிரதிநிதி கொழும்பு வருகை!

தமது விசேட பிரதிநிதியொருவரை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் Shehbaz Sharif இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் தொழில் மற்றும் உற்பத்தித்துறையின் விசேட உதவியாளர் ஹாரூன் அக்தர் கான் Haroon Akhtar Khan என்பவரே கொழும்பில் களமிறங்கியுள்ளார்.

பாகிஸ்தான் – இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழுவின் 13ஆவது அமர்வில் அவர் பங்கேற்பதற்காகவே மூன்று நாள் பயணமாக அவர் இலங்கை வந்துள்ளார்.

மேற்படி அமர்வை வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்புப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

ஹாரூன் அக்தர் கானுடன் பாகிஸ்தானின் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளும் கொழும்பு வந்துள்ளனர்.

இவர்களை பிரதி அமைச்சர் R.M. Jayawardena கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!