மீண்டும் அதிகரித்த தங்கம் : பவுண் ஒன்றின் விலை 4 இலட்சத்தை கடந்தது!
உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கமைய இன்றைய தினம் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்று 5,250 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.
அதேபோல் வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவையும் உச்சத்தை தொட்டன.
சர்வதேச சந்தையின் விலை உயர்விற்கு அமைய, புறக்கோட்டை தங்கச் சந்தையில் பவுண் ஒன்றின் விலை 10000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இதன்படி 22 காரட் தங்கத்தின் விலை 379,600 ஆக பதிவாகியுள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 405,000 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.





