புலம்பெயர்ந்தோருக்கு விசேட சலுகை வழங்கும் ஐரோப்பிய நாடு : 05 மாதங்கள் வாழ்ந்தால் சட்டப்பூர்வ அந்தஸ்த்து!
சட்டப்பூர்வ அங்கீகாரம் இன்றி நாட்டில் வசித்து வேலை செய்து வந்த புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவதாக ஸ்பெயின் அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஸ்பெயினின் இடம்பெயர்வு அமைச்சர் எல்மா சாய்ஸ் (Elma Saiz) இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
ஸ்பெயினில் வசிக்கும் குடியேறிகளுக்கு ஒரு வருடம் வரை அங்கீகாரம் இல்லாமல் சட்டப்பூர்வ வதிவிட உரிமை மற்றும் வேலை செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கான விரைவான ஆணையின் மூலம் தனது அரசாங்கம் தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு அமைய, டிசம்பர் 31, 2025 க்கு முன்பு ஸ்பெயினுக்கு வந்தவர்களுக்கும், குறைந்தது ஐந்து மாதங்கள் ஸ்பெயினில் வாழ்ந்ததாக நிரூபிக்கக்கூடியவர்களுக்கும் எந்த குற்றப்பதிவும் இல்லை என்றால், சட்டப்பூர்வ அந்தஸ்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின்மூலம் 500,000 முதல் 800,000 பேர் வரை பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





