உக்ரைன் – ரஷ்யா போரில் 02 மில்லியன் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
உக்ரைன் – ரஷ்யா போரில் ஏறக்குறைய 02 மில்லியன் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சிந்தனைக் குழுவால் நேற்று வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதில் ரஷ்யா சார்பில் போரிட்ட 325,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CSIS) கண்டறிந்துள்ளது.
“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்தவொரு போரிலும் இந்த எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை “ரஷ்யப் படைகள் போர்க்களத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மெதுவாக முன்னேறி வருகின்றன” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





