சீனாவில் பனிச்சிறுத்தையுடன் புகைப்படம் எடுக்க முயன்ற பெண் வீரருக்கு நேர்ந்த கதி
வடமேற்கு சீனாவில்(China) புகைப்படம் எடுக்க அருகில் செல்ல முயன்ற ஒரு சுற்றுலாப் பயணியை பனிச்சிறுத்தை ஒன்று தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஜின்ஜியாங்(Xinjiang) பிராந்தியத்தில் உள்ள கோக்டோகாய்(Koktokai) நகரில், ஒரு பெண் பனிச்சறுக்கு வீரர், தங்கள் ஹோட்டலுக்குத் திரும்பிச் செல்லும்போது தாக்கப்பட்டதாக வனவியல் மற்றும் புல்வெளி பணியகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களில், சுற்றுலாப் பயணி பனி தரையில் அசையாமல் கிடப்பதையும் சிறுத்தை அருகில் அமர்ந்திருப்பதையும் காட்டியது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், விரைவில் அவர் குணமடைவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் காட்டு விலங்குகளை சந்திக்கும் போது பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுபோன்ற சூழ்நிலைகளை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.





