இலங்கை செய்தி

இலங்கை–நெதர்லாந்து உறவை வலுப்படுத்த திட்டம்!

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe de Boer, இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை Aruna Jayasekara சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகத்தில்
நேற்று (26) மேற்படி சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் தொடர்பான விடயங்கள் மற்றும் இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேரிடரின்போதும், அதற்கு பின்னரும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து நெதர்லாந்து வழங்கிய உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

அனர்த்தத்தின் பிந்தைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நெதர்லாந்து தூதுவர் பாராட்டினார்.

இலங்கையின் முக்கிய வளர்ச்சி முன்னுரிமைகளுடன் இணைந்து, குறிப்பாக அனர்த்த அபாயக் குறைப்பில் நிபுணத்துவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் நெதர்லாந்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!