அமெரிக்க தாக்குதல் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் – ஈரான் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான பெரிய போர்க்கப்பல் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேர்காணாலொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை ஈரானின் தலைமை, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இணைய முடக்கங்களால் ஏற்பட்ட கடுமையான போராட்டங்களில் அதிகளவான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளமை காரணமாக,
அமெரிக்க தாக்குதல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஈரானிய அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் வருகை, ஈரானின் உறுதி மற்றும் தீவிரத்தை பாதிப்பதில்லை
என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈரானியர்கள் விரும்பினால், அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயார் என மூத்த அதிகாரியொருவரை
மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





