Just Eat UK செயலியில் புதிய AI குரல் உதவியாளர் அறிமுகம்
உணவு விநியோக நிறுவனமாக Just Eat வாடிக்கையாளர்களுக்கான புதிய AI குரல் உதவியாளரை UK செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய AI குரல் உதவியாளர், வாடிக்கையாளர்கள் எந்த உணவை உண்பது என்று முடிவெடுக்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் குரல் மூலம் ஆர்டரைப் பற்றி உரையாடி, தனிப்பட்ட பரிந்துரைகளை பெறலாம்.
குறித்த AI குரல் உதவியாளர், முன் ஆர்டர்கள் மற்றும் உணவு விருப்பங்களை பயன்படுத்தி சரியான பரிந்துரைகளை வழங்குகிறது.
இது பல மொழிகளில் பேசக்கூடியது என்பதுடன் பார்வைக் குறைபாடுகள் உள்ள பயனர்களுக்கும் பயன்படுகிறது.





