நேட்டோவை தாக்கும் ரஷ்யா – ஜெர்மனி எச்சரிக்கை!
போர் சூழ்நிலைக்கு ஜேர்மன் துருப்புக்கள் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மன் ஆயுதப்படை ஆதரவு கட்டளைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெரால்ட் ஃபங்கே (Lieutenant General Gerald Funke) அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நேட்டோமீது ரஷ்யா பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனியின் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் முழு அளவிலான போர் சூழலுக்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாசவேலை மற்றும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளிட்ட கலப்பின அச்சுறுத்தல்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளின் சாத்தியமான பயன்பாடு குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் இராணுவத் தயார்நிலையை அதிகரித்து வரும் நிலையில், ஜெர்மனி முழுவதும் சாத்தியமான ஆயத்தமின்மை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஜெனரல் ஜெரால்ட் ஃபங்கேவின் கருத்துக்கள் வந்துள்ளன.





