பிரபல சட்டத்தரணியின் மகனை காணவில்லை-பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!
திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட மூத்த சட்டத்தரணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜே எம்.லாஹீர் என்பவரின் மகனை காணவில்லை என திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவன் முக்சித் என்பவர் 26/01/2026 திங்கட்கிழமை காலை 7.00 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.
அவருடைய துவிச்சக்கர வண்டி புத்தகப் பை என்பன இந்து கல்லூரியின் மைதானத்திற்கு பின்புறமாக உள்ள பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
ஜே.எம். லாஹீர் – 0770040984
இதேவேளை காணாமல் போனது தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





