பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவு பேரணியில் மின்னல் தாக்குதல் – பலர் படுகாயம்
பிரேசிலின்(Brazil) முன்னாள் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின்(Jair Bolsonaro) ஆதரவாளர்கள் நடத்திய பேரணி அருகே மின்னல் தாக்கியதில் 89 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை தாங்கியதற்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போல்சனாரோவை ஆதரிக்க பிரேசில் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் மழையில் கூடினர்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் 42 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும் 47 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த பேரணி போல்சனாரோவுக்கு விடுதலை கோரி பிரேசிலிய பாராளுமன்ற உறுப்பினர் நிக்கோலஸ் ஃபெரீரா(Nicolas Ferreira) ஏற்பாடு செய்துள்ளார்.




