கொல்கத்தாவில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் மரணம் – 6 பேர் காணவில்லை
கொல்கத்தாவின்(Kolkata) தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஆனந்தபூர்(Anandapur) பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, உலர் உணவு கிடங்கில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து மற்றவர்களைத் தேடும் பணி இன்னும் நடந்து வருவதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
குறித்த கிடங்கில் உலர்ந்த, பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் இருந்துள்ளன.
இந்நிலையில், மாநில மின்சாரத்துறை அமைச்சர் அருப் பிஸ்வாஸ்(Arup Biswas) சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
மேலும், கிடங்கில் தீ எப்படி தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை மற்றும் இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக அருப் பிஸ்வாஸ் குறிப்பிட்டுள்ளார்.





