கிரேக்கத்தில் பற்றி எரிந்த தொழிற்சாலை – 04 பெண்கள் உயிரிழப்பு!
கிரேக்கத்தில் பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 04 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலைக்குள் 13 பேர் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்டவுடன் 08 பேர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியதாகவும், நால்வர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். அத்துடன் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.





