கல்வி மறுசீரமைப்புக்கு முழு ஆதரவு: சஜித் விசேட அறிவிப்பு!
கல்வி சீர்திருத்தங்களை education reforms முறையாக முன்னெடுப்பதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இன்று (26) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ தரம் 6 இற்குரிய பாட அலகுச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.
கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது சுமத்துவதற்கு ஆளுங்கட்சி முயற்கின்றது. அந்த சீர்திருத்தங்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இடை நிறுத்தியது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
.
கல்வி மறுசீரமைப்பை பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அரசாங்கத்தின் பொறுப்பற்றதன்மையாலேயே அது குழம்பியது.
எனவே, கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, ஆபாச விடயங்களை நீக்கி, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே இந்த கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
கல்வித் துறையில் முற்போக்காக செயற்படும் நிபுணர்கள் காணப்படுகின்றனர். அவர்களுடன் கலந்துரையாடி முற்போக்கான முடிவை எடுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்.
கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இந்த அரசாங்கம் முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சியும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் தயார்.” – என்றுள்ளது.





