இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவை நாளை தாக்க போகும் புயல் சந்திரா – மக்களுக்கு அவசர அறிவிப்பு

புயல் சந்திரா (Chandra) பிரித்தானியாவை நாளை செவ்வாய்க்கிழமை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய வானிலை அலுவலகம் பலத்த காற்று மற்றும் மழை வீழ்ச்சிக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கோரெட்டி மற்றும் இங்க்ரிட் புயல்களுக்கு பிறகு, இந்த மாதம் பிரித்தானியாவை தாக்கும் மூன்றாவது பெரிய புயல் சந்திராவாகும்.

வடக்கு அயர்லாந்தில் கிழக்குப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அம்பர் காற்று எச்சரிக்கை அமலில் இருக்கும்.

கடுமையான காற்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் வீசும் என்பதுடன் கடலோர அலைகளை பெரிதும் மேலெழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்தில் செவ்வாய்க்கிழமை காலை 09 மணி வரை 30-50 மிமீ பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!