இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருக்கு அஞ்சலி

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வீரவணக்கம் செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போது, இங்கு உயிரிழந்த இராணுவத்தினருக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் அஞ்சலி செலுத்துவது மரபாகும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரகத்திலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, குடியரசு தின உரைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் இன்றைய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!